எச்சரிக்கை: சென்னையில் 5 முக்கிய சுரங்கப் பாதைகளில் தேங்கிய மழைநீர்!

தமிழகம்

சென்னையில் கடந்த சில மணி நேரமாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். கனமழை காரணமாக, மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்தும் கடுமையாக பாதித்துள்ளது. பணியாளர்கள் பணியிடத்தில் இருந்து வீடுகளுக்கு திரும்ப முடியாமல், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள 5 முக்கிய சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கெங்குரெட்டி சுரங்கப் பாதை, பெரம்பூர் ஹை-ரோட் சுரங்கப் பாதை, நுங்கம்பாக்கம் சுரங்கப் பாதை, துரைசாமி சுரங்கப்பாதை மற்றும் அரங்கநாதன் சுரங்கப்பாதை ஆகிய 5 சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளதாகவும், பெரம்பூர் ஹை-ரோட் சுரங்கப் பாதையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சுரங்கப்பாதைகளுக்கு பதில், மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

அதுமட்டுமின்றி மழை மற்றும் வெள்ளம் தொடர்பான உதவிகளுக்கு, பொதுமக்கள் 1913 என்ற உதவி எண்ணிலும், 04425619204, 04425619206 மற்றும் 04425619207 ஆகிய லேண்ட்லைன் எண்களுக்கும் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், +91 9445477205 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் பொதுமக்கள் தங்கள் பாதிப்புகளை தெரிவிக்கலாம் என்றும், மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

மகிழ்

கனமழை எதிரொலி: சென்னை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்துக்கு என்னாச்சு? ஸ்டாலினுக்கு சென்ற சீக்ரெட் ரிப்போர்ட்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *