4 மாவட்ட கடற்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை – தமிழகத்தில் வானிலை எப்படி இருக்கும்?
தமிழகத்தில் இன்று (ஜூன் 15) முதல் ஜூன் 19-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய கடல்சார் மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய கடற்கரைகளில் சுமார் 2.2 மீ வரை அலைகள் எழும்ப வாய்ப்புள்ளதாகவும், நாளை இரவு 11 மணி வரை இங்குள்ள கடற்கரைகள் சீற்றத்துடன் காணப்படும் என இந்திய கடல்சார் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, கடற்கரையில் படகுகளை நிறுத்தி வைத்துள்ள மீனவர்கள் அவற்றை பாதுகாப்பான இடங்களில் கட்டி வைக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் நாட்டு படகு மீனவர்கள் கவனத்துடன் செல்ல வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
இது குறித்து, தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் இன்று (ஜூன் 12) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று முதல் ஜூன் 21-ஆம் தேதி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை
இன்று முதல் ஜூன் 19ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 – 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகரிக்கக்கூடும்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 -28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப்பகுதிகள்
இன்று (ஜூன் 15) முதல் ஜூன் 19ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 – 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்
இன்றும், நாளையும் தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்
அரபிக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று இன்று முதல் ஜூன் 18-ஆம் தேதி வரை மணிக்கு 35 -45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
யூமா வாசுகி, லோகேஷ் ரகுமானுக்கு சாகித்ய அகாடமி விருது!
சாதி மறுப்பு திருமணம்: சிபிஎம் அலுவலகம் சூறை… தலைவர்கள் கண்டனம்!