குடிநீருக்காக 5 கிலோமீட்டர் தூரம் செல்லும் மக்கள்!

தமிழகம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.மங்கலம் அருகே குழாயில் தண்ணீர் வராததால் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு அலைந்து கஷ்டப்பட்டு பொதுமக்கள் தண்ணீர் பிடித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான ஊர்களில் மக்கள் குடிதண்ணீருக்காக கஷ்டப்படும் நிலை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. திருச்சியில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்துக்குக் கொண்டுவரப்பட்டிருந்தாலும் இன்னும் மக்களின் குடிநீர் பிரச்சினை முழுமையாக தீரவில்லை.
இந்த நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள சோழந்தூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீருக்காக வடவயல் மற்றும் களக்குடி என 5 கிலோமீட்டர் தூரத்துக்குச் சென்று தண்ணீர் பிடிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட வாகனங்களில் அலைந்து கஷ்டப்பட்டு குடிநீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி பேசியுள்ள சோழந்தூர் பகுதியைச் சேர்ந்த பெண்கள், “சோழந்தூர் பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் தண்ணீர் சரியாக வருவது கிடையாது. அதனால் சோழந்தூரில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள களக்குடி கிராமத்துக்குச் சென்று அங்குள்ள குழாயில் வரும் குடிநீரைப் பிடித்து வருகிறோம். குடிநீருக்காக தினமும் அலைந்து கஷ்டப்பட்டு வரும் நிலை என்றுதான் எங்களுக்கு தீருமோ என்ற கவலைதான் தினமும் உள்ளது” என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்

– ராஜ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

1 thought on “குடிநீருக்காக 5 கிலோமீட்டர் தூரம் செல்லும் மக்கள்!

  1. It’s the water scarcity beating Tanzania and Ethiopia like S.A,Its a shame and pitiable status of the concerned administrative vagary.we are celebrating 75 th National independency day which aimed to full fill the non attended priorities of common man.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *