பிரபல யூடியூபர் விஜே சித்துவிற்கு எதிராக சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (மே 31) புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திரைப்பிரபலங்களை போல யூடியூப் பிரபலங்களும் தற்போது மக்களிடையே விரைவில் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் விஜே சித்து விலாக் என்ற யூடியூப் சேனலுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
விஜே சித்து விலாக்கில் நண்பர்கள் சேர்ந்து இருந்தால் என்னென்ன செய்வார்கள், நண்பர்களுடன் வெளி ஊர், வெளிநாடு என சென்று அங்கு தங்களுக்குள் நடக்கும் சம்பவங்களை வீடியோவாக வெளியிட்டு வருகிறார்கள். இவர்களது யூடியூப் சேனலில் 2.58 மில்லியன் பாலோயர்களையும், இன்ஸ்டாகிராமில் 559 லட்சம் பாலோயர்களையும் கொண்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு யூடியூபரான டிடிஎஃப் வாசன், கார் ஒட்டிக்கொண்டிருந்த போது செல்போனில் பேசியதாக மதுரை அண்ணாநகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், விஜே சித்து போக்குவரத்து விதிகளை மதிக்காமலும் அஜாக்கிரதையாகவும், செல்போனில் பேசியபடி வாகனத்தை இயக்கியதாக புகாரளித்துள்ளனர்.
இதுகுறித்த சம்பந்தப்பட்ட வீடியோ யூடியூப்பில் வெளியிட்ட நிலையில், அதனை பார்த்து மாணவர்கள், இளைஞர்கள் தவறான வழியில் செல்ல வழிவகுக்கும் என்றும், வீடியோவில் ஆபாச வார்த்தைகள், இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய விஜே சித்து மீது தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ஷெரின் என்பவர் சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக விரைவில் விசாரணை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோவை… சுருண்டு விழுந்த தாய் யானை; சுற்றிச் சுற்றி வரும் குட்டி யானை
இப்போது வெள்ளத்துரை… அடுத்து முருகன்? கடைசி நேர சஸ்பெண்ட் லிஸ்ட்!