இன்று (டிசம்பர் 4) காலை முதல் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டும்.
இந்த ஆண்டு குற்றால சீசன் முடிவுற்ற நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, புலியருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், சிற்றருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்தனர்
இந்தநிலையில், நேற்று மாலை முதல் தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக, அருவிகளில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தென்காசி மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
இதனைத் தொடர்ந்து இரவு முழுவதும் மழை பெய்யாத காரணத்தினால், அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து குறைந்தது. இதனால் சுற்றுலாப்பயணிகள் இன்று காலை முதல் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது.
இன்று வார விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை மட்டுமல்லாது, ஐயப்ப பக்தர்களின் வருகையும் அதிகளவில் காணப்படுகிறது.
அருவிகளில் கொட்டும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாய் குளித்து மகிழ்கின்றனர்.
செல்வம்
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – அடிக்கடி பிரியாணி சாப்பிடுவது ஆபத்தானதா?