சபரிமலையில் நாளை சித்திரை விஷூ!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை (ஏப்ரல் 15)  சித்திரை விஷூ கனி காணும் நிகழ்ச்சி நடக்கிறது.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் சித்திரை மாத பிறப்பையொட்டி ஏப்ரல் 11ஆம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில் அங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான சித்திரை விஷூ கனி காணும் நிகழ்ச்சி நாளை (ஏப்ரல் 15) நடக்கிறது.

சித்திரை முதல் நாளில் இறைவன் முன்பு படைக்கப்படும் காய்கனி வகைகளை பார்த்து சாமி தரிசனம் செய்தால் அந்த ஆண்டு இனிமையாகவும், வளமையாகவும் அமையும் என்பது கேரள மக்களின் நம்பிக்கை.

சித்திரை விஷூ நாளில் சபரிமலை கோயிலிலும் இதற்காக சிறப்பு பூஜைகள் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும்.

இதற்காக நாளை அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. அப்போது காய்கனிகள் அடுக்கிவைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

பூஜைகள் முடிந்த பின்னர் சாமி முன்பு படைக்கப்பட்ட காய்கனிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதுபோல கைநீட்டமும் அளிக்கப்படும்.

இதை கோயில் தந்திரி மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி ஆகியோர் வழங்குவார்கள். இதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இந்த ஆண்டும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்த ஆண்டு சித்திரை மாத சிறப்பு நிகழ்ச்சிகளுக்காக திறக்கப்படும் கோயில் நடை வருகிற 19ஆம் தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ராஜ்

நீருக்கடியில் மெட்ரோ: கொல்கத்தாவில் சோதனை ஓட்டம்!

கிச்சன் கீர்த்தனா: லெமன் ஸ்குவாஷ்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts