உத்தரப்பிரதேச மாநிலம், ஃபதேபூரில் ஒரே ஆட்டோவில் 27 பேர் பயணம் செய்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஃபதேபூர் மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அதிவேகமாக ஆட்டோவை ஓட்டிச் சென்றதைக் கண்டு போலீஸார் அவரை நிறுத்தச் சொன்னபோது உள்ளே வரம்பு மீறி அதிகமான பயணிகள் அமர்ந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
போலீஸார் ஒவ்வொருவராக எண்ணியப்பொழுது திகைத்துப் போயினர். ஒரே ஆட்டோவில் 27 பேரை வைத்து வண்டியை ஓட்டி இருந்திருக்கிறார் ஆட்டோ ஓட்டுநர். ஒரு அங்குலம் கூட நகர முடியாமல், பயணிகள் உள்ளே அமர்ந்து இருகின்றனர். இதில் சில குழந்தைகளும் அடக்கம்.
இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். பலர் இதை மீம் கன்டென்ட ஆக்கினாலும், சிலர் சமூக அக்கறையுடன் இப்படியான ஆபத்தான பயணங்களைச் செய்யும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது கடுமையான தண்டனை எடுக்க வேண்டும் என்று பகிர்ந்து வருகின்றனர்.
-ராஜ்