சென்னை மெரினா கடற்கரையில், ’பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்’ என்பது குறித்த மணல் சிற்பத்தை தமிழக முதல்வர் இன்று பார்வையிட்டார்.
தமிழ்நாடு அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்ட “பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்” என்பது குறித்த மணல் சிற்பத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். மு.க. ஸ்டாலின் இன்று (30.12.2022)
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரமும் தமிழ்நாடு அரசின் ’181 மகளிர் உதவி மையம்’ செயல்பட்டு வருகிறது.
இதன்மூலம் குடும்ப பிரச்னை உள்ளிட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல்துறை, மருத்துவத்துறை, சட்டஉதவி, மனநல ஆலோசனை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கப்படுகின்றன.

181 இலவச தொலைபேசி எண், மின்னஞ்சல், ஆன்லைன் உரையாடல் போன்றவை மூலமாக உதவி மையத்தை நாடும் வசதி உள்ளது.
மேலும், பெண்களுக்காக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த விவரங்களையும், குடும்ப வன்முறை மற்றும் இதர வகை கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அரசு வழங்கும் உதவிகள் குறித்தும் கேட்டறியலாம்.
இந்த நிலையில், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்திடவும், பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், தமிழ்நாடு அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் சென்னை, மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்ட ’பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்’ என்பது குறித்த மணல் சிற்பத்தை தமிழக முதல்வர் இன்று (டிசம்பர் 30) பார்வையிட்டு, ’பெண்கள் பாதுகாப்பு உறுதிமொழி’ விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டார்.
ஜெ.பிரகாஷ்
எப்போதும் பிரியாணி தான் டாப்: சொமேட்டோ
பாமக பற்றி பிரசாந்த் கிஷோர்: பொதுக்குழுவில் அன்புமணி தகவல்!