விலை உயர்வு: தக்காளி செடிகளை பாதுகாக்கும் விவசாயிகள்!

Published On:

| By Monisha

Vine Clips to protect tomatoes

தக்காளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தக்காளி பழங்கள் வீணாவதைத் தடுக்க செடிகளுக்கு விவசாயிகள் கொடிகள் கட்டி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள விவசாயிகள் தென்னைக்கு அடுத்தபடியாக காய்கறி சாகுபடியில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக வடக்கிபாளையம், புரவிபாளையம், ஜமீன்காளியாபுரம், பெரும்பதி, கோவிந்தனூர், மாப்பிள்ளைகவுண்டன்புதூர், சூலக்கல், நெகமம், கோமங்கலம், தேவனூார்புதூர் ஆகிய பகுதிகளில் தக்காளி செடிகள் பெருமளவில் பயிரிடப்பட்டு உள்ளது.

தற்போது தமிழகம் முழுவதும் தக்காளியின் விலை பெருமளவு அதிகரித்து உள்ளது. எனவே பொள்ளாச்சி தாலுகா விவசாயிகள் தக்காளி சாகுபடியில் கூடுதலாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் கோடை மழை தொடங்கியதை முன்னிட்டு விவசாயிகள் கடந்த மே மாதம் முதல் தக்காளியை பயிரிட்டு வருகின்றனர். அவை தற்போது விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் பலத்த காற்றுடன் கூடிய தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்கு பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

பொள்ளாச்சி பகுதியில் பருவமழை பெய்து வருவதால் அங்கு உள்ள தோட்டங்களில் தக்காளி செடிகள் மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் கீழே சாய்ந்து வருகின்றன. தக்காளி பழங்களும் செடியில் இருந்து உதிர்ந்து கீழே விழுந்து அழுகி நாசமாகி வருகின்றன.

எனவே பொள்ளாச்சி தோட்டங்களில் விளையும் தக்காளி பயிர்களை பாதுகாக்க அங்கு உள்ள தோட்டங்களில் செடிகளுக்கு இடையே நீண்ட கம்பிகள் கட்டப்பட்டு வருகின்றன.

இதன்மூலம் அங்கு வளரும் செடிகள் மழையில் சரிந்து விழுவதை தடுக்க முடியும். தக்காளி பழங்கள் உதிர்ந்து கீழே விழுந்து அழுகி வீணாவதையும் தடுக்க இயலும்.

இந்த நிலையில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தக்காளி அறுவடை பணிகள் தொடங்கினால் மார்க்கெட்டுக்கு வரத்து கூடுதலாக இருக்கும். அப்போது தக்காளியின் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்று காய்கறி சந்தை வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

ராஜ்

மணிப்பூர் வன்முறையும், மக்களாட்சி விழுமியங்களும்

கிச்சன் கீர்த்தனா: ராகி சேமியா கிச்சடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel