நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பேருந்து நிறுத்த பகுதியில் கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. வருடம் தோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த கோவிலில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில், விநாயகர் சிலை அமைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த வருட விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை அமைத்து காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர். இந்த நிகழ்வின்போது காண்போரை கவரும் வகையில் மேளதாள இசைக்கு ஏற்றவாறு நாட்டியம் ஆடும் மூன்று குதிரைகள் ஊர்வலத்தில் இசைக்கு ஏற்றவாறு நடனமாடியபடி நடந்து வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணன்கோவில் வடக்கு மாட தெருவில் முன்னாள் கவுன்சிலரும், மிலாடி நபி குழு நிர்வாகியுமான அஸ்லாம் தலைமையில் 20க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இந்து மக்களுடன் சேர்ந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடினர்.
விநாயகர் சிலை மற்றும் மாலை, பழங்கள், இனிப்பு வகைகள், வெற்றிலை, பாக்கு, கற்பூரம் உள்ளிட்ட பூஜை பொருட்களை இஸ்லாமியர்களே வழங்கினர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வாழை இலையில் இஸ்லாமிய மக்கள் விருந்து வழங்கினர்.
அதே போல , சென்னை திருவிக நகரில் 5 ஆயிரம் பிஸ்கட் பாக்கெட்டுகளை கொண்டு 26 அடி உயர பிரமாண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகர் சிலைக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
வக்ஃபு மசோதா: மத்திய அரசு உண்மைகளை மறைப்பது ஏன்? – ஆ.ராசா கேள்வி!
சிகிச்சைக்காக ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளாரா? – எடப்பாடியை சாடிய ஆர்.எஸ்.பாரதி