விழுப்புரம் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதால், பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். Villupuram +2 Girl student commits suicide
விழுப்புரம் நகரில் இயங்கி வரும் ராமகிருஷ்ணா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவி அவரது வீட்டில் இன்று (டிசம்பர் 14) தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர்கள், உறவினர்கள் நியாயம் கேட்டு மாணவி படித்த பள்ளியில் குவிந்தனர். இந்த தகவல் கேள்விப்பட்ட விழுப்புரம் சரக டிஐஜி ஜியாவுல் ஹக் விழுப்புரம் சரகத்தில் உள்ள போலீசார்களை வரவழைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளார்.
ஏற்கனவே, கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி, பள்ளி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக மாறி பள்ளி சூறையாடப்பட்டது.
அதை மனதில் வைத்துக்கொண்ட காவல்துறையினர் விழுப்புரம் மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்து விடக்கூடாது என்று போலீசாரை குவித்துள்ளனர்.
விழுப்புரம் மாணவி ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ன நடந்தது என்று நாம் விசாரணையில் இறங்கினோம்.
“விழுப்புரம் அருகில் உள்ள ஒருக்கோடி கிராமத்தில் வசிக்கும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நேதாஜி, மதினா தம்பதியர். இவர்களது மகள் சுனிதா. விழுப்புரம் ராமகிருஷ்ணா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். மகன் நரேஷ், பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று டிசம்பர் 13 ஆம் தேதி அரையாண்டு தமிழ் தேர்வு நடைபெற்றது. அப்போது மாணவி பிட் அடித்ததாகவும், இதைப் பார்த்த பள்ளி ஆசிரியை சௌமியா, பள்ளி முதல்வரிடம் ரிப்போர்ட் செய்ததாகவும் கூறப்படுகிறது.
பள்ளி முதல்வர், மாணவி சுனிதாவின் தந்தை நேதாஜி, தாயார் மதினா இருவரையும் நேற்றே பள்ளிக்கு அழைத்து மாணவி செய்த சம்பவத்தை சொல்லி நாளைக்கு பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர்களுடன் அனுப்பி வைத்துள்ளார்.
பள்ளி கேட்டுக்கு வெளியில் வந்தவுடன் தந்தை நேதாஜி, ‘இப்படி தவறு செய்து அசிங்கப்படுத்துட்டியே’ என்று கோபப்பட்டு மாணவி சுனிதாவின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
கண்கலங்கியபடி பெற்றோர்களுடன் வீட்டுக்கு சென்ற மாணவி சுனிதா இரவு சாப்பிடாமல் சரியாக தூங்காமல் மௌனமாக இருந்துள்ளார்.
இன்று டிசம்பர் 14 ஆம் தேதி மதியம், வீட்டில் இருந்த ஃபேனில் துணியால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த தகவல் அறிந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், பகுஜன் கட்சி நிர்வாகிகளுடன் பள்ளிக்கு சென்று நியாயம் கேட்டு போராடி வருகின்றனர்.
இதனால் பள்ளிக்குள்ளும், வெளியேவும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெற்றோர்களிடம் புகார் கொடுங்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம் என புகார் கேட்டும், புகார் கொடுக்காமல் நிர்வாகத்தினரிடம் ஆறு மணி நேரமாக பேசி வருகின்றனர்” என்கிறார்கள் காவல்துறையினர்.
மாணவியின் தந்தை நேதாஜி திமுக கிளை செயலாளராக உள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தரப்பினர் எஸ்சி/எஸ்டி பிரிவிலும், கொலை வழக்கும் பதிவு செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.
பள்ளி நிர்வாகத்தினர், “இந்த பள்ளியில் இரண்டாயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர், அவர்களை நல் ஒழுக்கமாக திறமையாக உருவாக்க வேண்டும் என்று நல்ல கல்வியை கொடுத்து வருகிறோம், பிட் அடித்ததை கேட்பது தவறு என்றால் பள்ளியை எப்படி நடத்துவது” என்று கேள்வி கேட்கிறார்கள்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மாணவியின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் போராடி வருகின்றனர்.
-வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சிம்பு தேவன் – யோகி பாபு படத்தின் டீசர் வெளியீடு எப்போது?
விபத்தில் சிக்கிய விஷால் படக்குழுவினர்!
திமுகவிடம் எம்.பி.சீட் கேட்கும் தவாக… அழைக்கும் அதிமுக : வேல்முருகன் பேட்டி!
Villupuram +2 Girl student commits suicide
ஒவ்வொரு மாணவரின் தற்கொலையும் வியாபாரமாக்க படுகிறதா! ஆளும் கட்சி ஆதரவு இருந்தால் மட்டுமே பள்ளிகள் நடத்த முடியுமா! இதுவே ஒரு அரசு பள்ளியாக இருந்திருந்தால் அரசு இந்த பஞ்சாயத்து செய்பவர்களிடம் அடங்கி போகுமா! ஒவ்வொரு உயிரும் மதிப்பு மிக்கது ஆனாலும் இந்த மாதிரி பின் நடவடிக்கைகள் எந்த மாதிரி எடுத்து கொள்வது? அரசு சரியான ஒழுங்காற்று குழு அமைத்து சட்ட படியான விதிமுறைகள் வரன் செய்ய பட வேண்டிய காலம் வந்து விட்டது..தற்கொலை வியாபாரம் ஆக்குவது எவ்வாறு அனுமதிக்கபடுகிறதோ! அந்த சரஸ்வதிக்கே வெளிச்சம்..
மாணவிக்கு ஆழ்ந்த இரங்கல்..