தங்கள் கிராமத்தில் பெரும்பாலானவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படவில்லை என்பதால், அதைக் கண்டித்து தஞ்சாவூர் அருகே ஊர் மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ளது அரசூர் கிராமம். இந்தக் கிராமத்தில் மொத்தம் 320 குடும்பங்கள் இருப்பதாகவும், அவர்களில் 250 குடும்பங்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்றும் அனைவரது விண்ணப்பமும் தவறான காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தஞ்சாவூர் – திருவையாறு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் இறங்கினர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.
தகவல் அறிந்ததும் நடுக்காவேரி காவல் நிலைய போலீஸார் மற்றும் தஞ்சாவூர் வட்டாட்சியர் உள்ளிட்டவர்கள் உடனடியாக வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தகுதியான அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதேபோல விழுப்புரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உரிமைத் தொகை கேட்டு சாலை மறியல் நடந்தது. இந்த நிலையில் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்திலும் சாலை மறியல் போராட்டம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
ராஜ்
காஸா:’இண்டியா’ கூட்டணிக்கு ஒரு வேண்டுகோள்!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!