வில்லேஜ் குக்கிங் சேனல் பெரிய தம்பிக்கு என்னாச்சி?

Published On:

| By Minn Login2

யூடியூப் உலகில் மிக பிரபலமான தமிழ்நாட்டை சேர்ந்த வில்லேஜ் குக்கிங் சேனலின் மூத்த சமையல் கலைஞரான பெரியதம்பி இதய நோய் காரணமாக இன்று (மார்ச் 28)மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சின்ன வீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெரியதம்பி மற்றும் அவரது குடும்பத்தினர். இவர்கள் ’வில்லேஜ் குக்கிங் சேனல்’ என்ற பெயரில் 24 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைப்பர்களுடன் யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர். இந்த சேனலில் முழுவதும் அசத்தலான சமையல் மற்றும் உணவு பொருட்களை அடிப்படையாக கொண்டு வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன.

ஐந்து வருடங்களுக்கு முன்னால் தொடங்கப்பட்ட இந்த வில்லேஜ் குக்கிங் சேனலில் மூத்த சமையல் கலைஞராக பெரிய தம்பி  உள்ளார். தாத்தா என்று அழைக்கப்பட்டு வரும் அவர், உணவு பொருட்களையே மையமாக கொண்டு இயங்கி வரும் இந்த சேனலில் முக்கிய நபராக உள்ளார்.

இந்த நிலையில் இன்று திடீரென ஏற்பட்ட இதய நோய் காரணமாக பெரிய தம்பி இன்று காலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மிகவும் துடிப்புடன் செயல்பட்டு வந்த இவர் தற்போது இதய நோய் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவருடைய உடல்நிலை இயல்பிற்கு திரும்பி உள்ளதாக வில்லேஜ் குக்கிங் சேனல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த சேனலின் நிர்வாகியான வேல்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து பெரிய தம்பி நலம்பெற வேண்டி பலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

-மாணவ நிருபர் கவின்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“ஃபேமிலி ஸ்டார்” டிரைலர் எப்படி..?

செல்வ கணபதி, டிடிவி தினகரன் வேட்புமனுக்கள் கடைசி நேரத்தில் ஏற்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share