விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக நின்ற பெண் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று (ஜூலை 10) காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அன்னியூர் வாக்குச்சாவடியிலும், பாமக வேட்பாளர் சி.அன்புமணி பனையபுரம் வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனர்.
விக்கிரவாண்டியில் மதியம் 1 மணி நிலவரப்படி, வாக்குசதவிகிதம் 50.95 சதவிகிதமாக உள்ளது.
இந்த நிலையில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் T-கொசப்பாளையம் வாக்குச்சாவடியில் கனிமொழி (வயது 49) வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருந்தார். அப்போது அவரை திடீரென அங்கு வந்த ஏழுமலை (வயது 52) என்பவர் கழுத்தில் கத்தியால் குத்தினார்.
இதனால் அங்கிருந்தவர்கள் கூச்சலிட்ட நிலையில், தப்ப முயன்ற ஏழுமலையை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கஞ்சனூர் காவல்நிலைய போலீசார் பிடித்து கைது செய்தனர்.
இரத்தம் வழிய கனிமொழி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டார். மேலும் கனிமொழியை குத்திய ஏழுமலை அவரது முன்னாள் கணவர் என்பதும், அவர் ஏற்கெனவே இரட்டை கொலை வழக்கில் சிறை சென்று வந்தவர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
விக்கிரவாண்டி தேர்தல்: 1 மணி நிலவரம்… 50.95% வாக்குப்பதிவு!
மதுரை சுங்கச்சாவடி முற்றுகை: ஆர்.பி.உதயகுமார் கைது…. எடப்பாடி கண்டனம்!