விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 77.3% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று (ஜூலை 10) காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. திமுக, பாமக மற்றும் நாதக கட்சியின் வேட்பாளர்கள் தங்களது சொந்த கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
விக்கிரவாண்டியில் மொத்தம் உள்ள 276 வாக்குச்சாவடிகளிலும் காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் அதிகளவில் வாக்களித்து வருகின்றனர்.
அதனால் மதியம் 1 மணி நிலவரப்படி 50.95% சதவீதமூம், 3 மணி நிலவரப்படி 64.44 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது.
இந்த நிலையில் விக்கிரவாண்டியில் மாலை 5 மணி நிலவரப்படி, ஆண்கள் 89,045 பெண்கள் 95,207 மாற்று பாலினத்தவர் 3 என மொத்தம் 1,84,255 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். வாக்கு சதவிகிதம் 77.73 சதவிகிதமாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கழிவுகளை எரிக்கும்போது பலி : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
இந்தியாவிலேயே தமிழகம் முன்னணி மாநிலம் !