“இல்லம் தோறும் வள்ளுவர்” திட்டத்தில் முதல் சிலையை விஜய்சேதுபதி பெற்றுக்கொண்டார்.
திருக்குறளை தந்த “திருவள்ளுவர்” சிலையை ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறையில் கொண்டு சேர்ப்பதன் மூலம், அவர் குறள் வழி வாழ்க்கையை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி, அவரது கருத்துக்களை பின்பற்ற வைக்கலாம் எனும் முயற்சியாக சிலை(SILLAI) நிறுவனம் ‘இல்லம் தோறும் வள்ளுவர்’ திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இத்திட்டத்தின்படி அனைவரது வீட்டிற்கும் வள்ளுவர் சிலை சென்று சேரும் வகையில் மிகக்குறைந்த விலையில் உருவாக்கி வழங்குகிறது சிலை நிறுவனம்.
இந்த சிலைகள் ரூபாய் 499 ல் துவங்கி ரூ 4999 வரை பல்வேறு அளவுகளில் கிடைக்கும்.

இத்திட்டத்தை அனைவருக்கும் பரப்பும் வகையில், விஜய்சேதுபதி முதல் சிலையை நேற்று தனது அலுவலகத்தில் வைத்து பெற்றுக்கொண்டார்.
இத்திட்டத்தில் 50,000 வது சிலையை கன்னியாகுமரி வள்ளுவர் சிலையின் அடிவாரத்திலும், 1 லட்சமாவது சிலையை மயிலையில் ‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்’ கையால் மிகப்பெரும் விழாவில் வழங்கி வாங்குபவர்களை கௌரவிக்க உள்ளனர்.
இராமானுஜம்
விஜய்யின் ஆடை : ஜேம்ஸ் வசந்தன் அட்வைஸ்!
“படுக்கை அறையில் கேமரா வைப்பது கேவலமான விஷயம்” – அண்ணாமலை மீது காயத்ரி குற்றச்சாட்டு!