ரசிகர்களை சந்தித்தார் விஜய்

தமிழகம்

நடிகர் விஜய் பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று (நவம்பர் 20) மதியம் 2.15 மணியளவில் பனையூரில் உள்ள தனது அலுவலகத்திற்கு விஜய் காரில் வந்தார்.

நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் இன்று சந்திக்கிறார்.

காலை முதலே ரசிகர்கள் கார், வேன் போன்ற வாகனங்களில் பனையூருக்கு வருகை தந்தனர்.

நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துவிட்டு, பின்னர் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

மற்ற மாவட்ட நிர்வாகிகளையும் நடிகர் விஜய் விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

செல்வம்

கோவையில் கார், மங்களூருவில் ஆட்டோ: அதிரவைக்கும் “பயங்கரவாத சம்பவம்”!

கரீம் பென்சிமா விலகல்: பிரான்ஸ் அணிக்கு பின்னடைவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0