‘ஒய்’ பாதுகாப்பு : விஜய்க்கு வழங்கப்பட்டதை விட கங்கனாவுக்குதான் அதிகம்!

Published On:

| By Kumaresan M

இந்தியாவில் குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், அரசியல்வாதிகள் , தொழிலதிபர்கள் போன்ற முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியை செய்வது சி.ஆர்.பி.எப் அமைப்புதான். இது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும். எக்ஸ், ஒய், ஒய் பிளஸ், இசட் மற்றும் இசட் பிளஸ் பிரிவுகளின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் Special Protection Group என்று அழைக்கப்படும் எஸ்.பி.ஜி அமைப்பில் 3 ஆயிரம் கமாண்டோக்கள் உள்ளனர். பிரதமர் மற்றும் அவரின் குடும்பத்தினரை பாதுகாக்க வேண்டியது இவர்களின் பொறுப்பு. 1985 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு, இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

1991 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு, அவரது குடும்பத்தினர் சோனியா காந்தி, ராகுல், பிரியங்காவுக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஆனால், 2019 ஆம் ஆண்டு சட்டதிருத்தத்துக்கு பிறகு பிரதமர் மற்றும் அவரின் குடும்பத்துக்கு மட்டுமே எஸ்.பி.ஜி அமைப்பு பாதுகாப்பு அளித்து வருகிறது.

அடுத்ததாக இசஸ் ப்ளஸ். அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுக்கு இத்தகைய பாதுகாப்பு கிடைக்கும். இதில், 55 கமாண்டோக்கள் இருப்பார்கள். 10 எஸ்.பி. ஜி கமாண்டோக்களும் இந்த குழுவில் இடம் பெறுவார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத், சில மத்திய அமைச்சர்களுக்கு இத்தகைய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்து இசட் பிரிவு பாதுகாப்பு. இதில், கமாண்டோக்கள், போலீஸ் அதிகாரிகள் என 22 பேர் இருப்பார்கள். நடிகர் அமீர்கான், பாபா ராம்தேவ் ஆகியோர் இந்த பாதுகாப்பை பெற்றுள்ளனர். இவர்கள் பணம் செலுத்தி இத்தகைய பாதுகாப்பை பெற்றுள்ளனர்.

ஒய்-பிளஸ் பிரிவில் 11 பேர் இருப்பார்கள். இரு தனி பாதுகாவலர்கள் மற்றும் பிற ஆயுதம் ஏந்திய போலீசார் அடங்கியிருப்பார்கள். அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கு இத்தகைய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பியுமான கங்கனா ரனாவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சி.ஆர்.பி.எப் வழங்கும் 8 பேர் கொண்ட கடைசி பாதுகாப்பு பிரிவுதான் ஒய் என்பதாகும்.ஓரிரு என்.எஸ்.ஜி கமாண்டோக்கள் இதில் இடம் பெறலாம். மிரட்டல் இருப்பவர்களுக்கு இந்த பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும். இந்த பிரிவு பாதுகாப்புதான் நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share