தனது மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளைஞர் விக்னேஷின் தாயார் போலீஸில் புகார் கொடுக்கவிருக்கிறார்.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜியை காய்கறி வெட்டும் கத்தியை கொண்டு தாக்கிய, புது பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
நேற்று (நவம்பர் 13) காலை மருத்துவமனைக்கு வந்து டாக்டர் பாலாஜியை தாக்கிவிட்டு, அந்த கத்தியை மருத்துவமனையில் இருந்த ஜன்னல் வழியே வீசிவிட்டு சென்ற போது அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் விக்னேஷை பிடித்து அடித்து தரையில் அமரவைத்தனர்.
இதுதொடர்பான வீடியோவில் விக்னேஷை ஒருவர் பின் தலையில் அடிப்பதும், ஒருவர் கயிறு எடுத்துட்டுவா, இவன் கையை கட்ட வேண்டும் என்று சொல்வதும் பதிவாகியுள்ளது.
தற்போது கைதாகியுள்ள விக்னேஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தனது மகனின் செயல்பாடு குறித்து அவரது தாயார் பிரேமா, “என் மகன் செய்தது சரினு சொல்லல. டாக்டரை அவன் கத்தியால் குத்தியது எனக்கு தெரியாது. அது தவறுதான். என் மேல் இருக்கும் பாசத்தால் நான் படும் அவஸ்தையால் இப்படி பன்னிட்டான். எனக்கு கீமோ மருந்தை அதிகளவு கொடுத்து டாக்டர் பாலாஜி இப்படி பண்ணது சரியா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தசூழலில் சிறையில் இருக்கும் விக்னேஷை வெளியில் எடுக்க குடும்பத்தினர் ஆலோசனை செய்து வருகின்றனர்.
இன்னொரு பக்கம், விக்னேஷின் தாயார் பிரேமா, அவரது சகோதரர்கள் கமலேஷ், லோகேஷ் ஆகியோர் கிண்டி காவல்துறை உதவி ஆணையர் ஸ்ரீராமை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுக்க இருக்கிறார்கள்.
தவறான சிகிச்சை அளித்ததால் நியாயம் கேட்க சென்ற என் மகனை தாக்கிய மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகன் ஒரு இதய நோயாளி, வலிப்பு நோயும் உள்ளது. அவருக்கு ஏதும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என்று பிரேமா புகாரளிக்கவுள்ளதாக விக்னேஷின் உறவினர்கள் கூறுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வணங்காமுடி
ரூ.100 கோடி வசூல் சாதனை செய்த ’லக்கி பாஸ்கர்’!
இந்தியன் நேவியில் இப்படியும் ஒரு சாதனை… இரு போர்க்கப்பல்களில் தலைவராக அக்கா- தம்பி!
மருத்துவருக்கு பிரச்னைன்னா, போராட்டம், ஸ்டிரைக்குனு நடக்குது. அவங்களுக்கு தனியா சட்ட பாதுகாப்பு வேணும்றாகளே, ஆனா பல இடங்கள்ல, அரசு மருத்துவருங்க, நர்ஸுங்க எல்லாம் நோயாளிகளை மிகக் கேவலமா நடத்துறாங்களே, அதுக்கு என்ன பண்ணலாம்?