பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டைத் தொடர்ந்து அவரது பெற்றோர் வீட்டிலும் இன்று (ஜூன் 6) லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அறிவியல் நகரத்தின் துணைத்தலைவராக இருப்பவர் மலர்விழி ஐ.ஏ.எஸ். இவர் முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2020 வரை தருமபுரி மாவட்ட ஆட்சியராக பதவி வகித்தார்.
கொரோனா காலத்தில் அங்கு பணியாற்றிய மலர்விழி ஐஏஎஸ், கிருமிநாசினி கொள்முதலில் முறைகேடு செய்ததாக கடந்த மாதம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இதனையடுத்து சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதனைத்தொடர்ந்து விழுப்புரம் சாலமேடு புகாரி நகரில் உள்ள மலர்விழி ஐஏஎஸ்-ன் பெற்றோர் வீட்டிலும் தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எதுவும் வெளிவராத நிலையில், சோதனைக்கு பின்னரே ஆவணங்கள் ஏதும் சிக்கியதா? என்பது தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
Comments are closed.