vigilance raid in ED office

அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: துணை ராணுவம் குவிப்பு!

தமிழகம்

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று (டிசம்பர் 1) சோதனை நடத்தி வரும் நிலையில் மத்திய துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. vigilance raid in ED office

திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் சுரேஷ் பாபு கடந்த 2018 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பின்னர் இந்த வழக்கு மதுரை அமலாக்கத்துறைக்கு சென்றுள்ளது. அப்போது பதவி உயர்வு பெற்று மதுரை அமலாக்கத்துறைக்கு வந்த அங்கித் திவாரி சுரேஷ் பாபுவை தொடர்பு கொண்டு, சொத்து குவிப்பு வழக்கை முடித்து வைக்க வேண்டுமானால் 3 கோடி தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

ஆனால் சுரேஷ் பாபு தர மறுத்ததால் 3 கோடி ரூபாயில் தொடங்கி இறுதியாக 51 லட்சம் வரை கேட்டுள்ளார். அதற்கு சுரேஷ் பாபு ஒப்புக் கொண்டு முதல் தவணையாக 20 லட்சம் ரூபாயை லஞ்சமாக கொடுத்துள்ளார்.

தொடர்ந்து மீதமுள்ள 31 லட்சத்தை கேட்டு சுரேஷ் பாபுவை அங்கித் திவாரி மிரட்டியுள்ளார். இது குறித்து சுரேஷ் பாபு லஞ்ச ஒழிப்புத்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

இந்த தகவலின் அடிப்படையில் சுரேஷ் பாபு லஞ்சம் கொடுக்கும் போது அங்கித் திவாரியை கைது செய்வதற்கு லஞ்ச ஒழிப்புத்துறையினர் தயாராக இருந்துள்ளனர். தொடர்ந்து ரூ.31 லட்சத்தை தனது கிளினிக்கிற்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறு அங்கித் திவாரியிடம் கூறியுள்ளார் சுரேஷ் பாபு.

ஆனால் திண்டுக்கல் – மதுரை நெடுஞ்சாலையில் பணத்தை கொண்டு வந்து கொடுக்குமாறு அங்கித் திவாரி தெரிவித்துள்ளார்.

அதன்படியே சுரேஷ் பாபு ரசாயனம் தடவிய பணத்தை எடுத்துக் கொண்டு சென்று கொடுக்கும் போது பணத்தை கையில் வாங்காமல் கார் டிக்கியில் வைக்குமாறு கூறியுள்ளார் அங்கித் திவாரி.

அதன்படி பணத்தை சுரேஷ் பாபு டிக்கியில் வைத்தவுடன் காரை எடுத்துக் கொண்டு வேகமாக சென்ற அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சேஸ் செய்து கைது செய்தனர்.

பின்னர் அவரை திண்டுக்கல் ஈபி காலனியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து மதுரையில் உள்ள மாவட்ட அமலாக்கத்துறை அலுவலகம், அங்கித் திவாரி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தற்போது துணை ராணவ படையினரும் அமலாகத்துறை அலுவலகத்தில் குவிந்துள்ளது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

ஸ்டூடியோ கிரீன் பேரே இல்ல?… வைரலாகும் பருத்திவீரன் சென்சார் சர்டிபிகேட்!

அன்று ஸ்டாலின் சொன்னது என்ன?

vigilance raid in ED office

+1
0
+1
0
+1
0
+1
5
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *