திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் ஆர்.எம் காலனி 1வது தெருவில் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீடு அமைந்துள்ளது. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (ஜூன் 23) அதிகாலை 5 மணி முதல் மகேஸ்வரி வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் ஆணையராக பணியாற்றி வந்த இவர் 3 மாதங்களுக்கு முன்பு தான் திண்டுக்கல் ஆணையராக பணி மாற்றம் செய்யப்பட்டார். காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக மகேஸ்வரி இருந்தபோது கொரோனா காலத்தில் கிருமி நாசினி வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
நெஞ்சுவலி : மருத்துவமனையில் சி.வி.சண்முகம்!