சென்னையில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று(ஜூன் 6) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2018 பிப்ரவரி முதல் 2020 அக்டோபர் வரை தர்மபுரி மாவட்ட ஆட்சியராக பதவி வகித்தவர் மலர்விழி ஐ.ஏ.எஸ். தற்போது, சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக உள்ளார்.
கொரோனா காலத்தில் தர்மபுரி மாவட்ட ஆட்சியராக மலர்விழி இருந்தபோது கிருமி நாசினி கொள்முதலில் முறைகேடு செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கடந்த மாதம் புகார் எழுந்தது.

இதனையடுத்து விருகம்பாக்கத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
எடப்பாடிக்கு எதிரான வழக்கு: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
சிகிச்சைக்கு பிறகு வனப்பகுதியில் விடப்பட்டது அரிசிக் கொம்பன்