தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் ரெய்டு!

தமிழகம்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று (மார்ச் 15) சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் சமீப நாட்களாகப் பத்திரப்பதிவு செய்வதற்கு, பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தச்சூழலில் தேனி, கடலூர், திருவண்ணாமலை, நாகை என பல்வேறு இடங்களில் இன்று சோதனை நடந்து வருகிறது.

பத்திரப்பதிவு செய்வதற்கு லஞ்சம் வாங்கி வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தேனி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சார்பதிவாளர் அலுவலகம், நாகை வட்டாட்சியர் அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது.

vigilance police conducting raids

திருவண்ணாமலையில் உள்ள இணை சார்பதிவாளர் அலுவலகம் 2ல் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீட்டுவரி, தண்ணீர் வரி, கடை வரி, பாதாள சாக்கடை இணைப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ் என அனைத்துக்கும் லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து கதவுகளையும் மூடிவிட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கோண்டூர் பகுதியில் உள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது. கடலூர் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையில் போலீசார் 4 பிரிவாகப் பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் அறையைப் பூட்டி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சலில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் சிறுபூலுவபட்டியிலுள்ள திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது.

பிரியா

ஆருத்ரா, ஹிஜாவு மோசடி: இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன? – ஐ.ஜி விளக்கம்

லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *