விக்டோரியா நீதிபதி வழக்கு: தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

தமிழகம்

விக்டோரியா கெளரி நீதிபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் இன்று (பிப்ரவரி 7) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

விக்டோரியா கெளரி நீதிபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இன்று காலை 10.35 மணியளவில் விக்டோரியா கெளரி நீதிபதியாக பதவியேற்க உள்ள நிலையில், அவரை நீதிபதியாக நியமிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று காலை 10.30 மணியளவில் நீதிபதிகள் சஞ்சய் கண்ணா மற்றும் பி.ஆர்.கவாய் ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் ராமச்சந்திரன் ஆஜராகி, “வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக விக்டோரியா கெளரி பேசியுள்ளார். அவர் நீதிபதிபதியாவதற்கு தகுதி இல்லாதவர்.” என்ற வாதத்தை முன்வைத்தார்.

அதற்கு நீதிபதிகள், “அரசியல் பின்புலம் கொண்டவர்கள் ஏற்கனவே நீதிபதியாக பணியாற்றியுள்ளனர். தனிப்பட்ட அரசியல் விருப்பங்கள் ஒருவர் நீதிபதியாக பணியாற்றுவதை தடுப்பதில்லை.

கொலிஜியத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? உரிய ஆலோசனைக்கு பின்பே கொலிஜியம் அவரை நீதிபதியாக பரிந்துரைத்துள்ளது. விக்டோரியா கெளரி வழக்கில் இந்த நேரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.” என்று உத்தரவிட்டனர்.

வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே, சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கெளரி பதவியேற்றுக்கொண்டார்.

செல்வம்

டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு ஆய்வு!

இறுதியாக மேளதாளத்துடன் களத்தில் இறங்கிய அதிமுக வேட்பாளர்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *