முதலமைச்சர் தலைமையில் தொடங்கிய துணைவேந்தர்கள் மாநாடு!

தமிழகம்

சென்னை முதலமைச்சர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது.

தமிழகத்தில் உயர்கல்வித் துறையின் கீழ் 21 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த பல்கலைக் கழகங்களுக்கு உட்பட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டை வளர்க்க பாடத்திட்டங்களை மாற்றியமைப்பது வழக்கம்.

அதன்படி, உயர் கல்வித்துறை மேம்பாடு, மாநிலக் கல்விக்கொள்கை, பாடத்திட்டங்களை மாற்றியமைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்க துணைவேந்தர்கள் மாநாடு இன்று(ஆகஸ்ட் 30) முதலமைச்சர் தலைமையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த மாநாட்டில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை இந்திய அளவில் கல்வியில் தரம் உயர்த்துவது மற்றும் மாணவர்களின் திறன் மேம்பாடுகளை வளர்ப்பது குறித்து முதலமைச்சர் துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

மேலும் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட இருக்கிறது.

கலை.ரா

துணைவேந்தர்கள் நியமன மசோதா: ஆளுநருக்கு அனுப்பி வைப்பு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *