நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடம் உறுதியாக உள்ளது. யாரும் அச்சப்பட தேவையில்லை என நேரில் ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னையில் தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் மாளிகை கட்டிடத்தில் தமிழக அரசின் பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று (அக்டோபர் 24) காலையில் வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் இருந்த போது, எதிர்பாராத விதமாக திடீரென நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடம் அதிர்ந்ததாக உணர்ந்த ஊழியர்கள், உடனடியாக கட்டடத்தை விட்டு பதற்றத்துடன் வெளியேறினர்.
தகவலறிந்து சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்த போலீசார், ”கட்டடத்தில் நில அதிர்வு எதுவும் இல்லை. அது வெறும் வதந்தி. முதல் தளத்தில் உள்ள டைல்சில் வெறும் Air Crack மட்டுமே ஏற்பட்டுள்ளது. வேறு எந்த பிரச்சினையும் இல்லை. எனவே ஊழியர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை” என்று தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து தகவலறிந்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, அதிகாரிகளுடன் சென்று உடனடியாக ஆய்வு மேற்கொண்டார். முதல்தளத்தில் டைல்ஸ் விரிசல் ஏற்பட்ட பகுதியையும் பார்வையிட்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “நாமக்கல் கவிஞர் மாளிகை 1974ஆம் ஆண்டு கட்டப்பட்டு திறக்கப்பட்ட மாளிகை. இங்கு தான் தலைமை செயலகத்தின் பல்வேறு துறை அலுவலகங்களும் உள்ளது.
இதில் விவசாயத்துறை இருக்கக்கூடிய முதல் தளத்தில் இன்று காலை திடீரென விரிசல் ஏற்பட்டது என்ற பீதியால், கட்டடத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் வெளியே வந்துவிட்டனர்.
இதுகுறித்து தகவல் தெரிந்த அடுத்த நிமிடமே பொறியாளர்களுடன் நான் அங்கு சென்று ஆய்வு செய்தேன்.
அதன்படி கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து எந்த காரணத்தைக் கொண்டும் அச்சப்பட தேவையில்லை. கட்டடம் உறுதியாகவே உள்ளது. முதல் தளத்தில் போடப்பட்டுள்ள சிறுசிறு டைல்ஸ் 14 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. பொதுவாக அப்போது போடப்பட்ட டைல்ஸ்களில் நாள் ஆக ஆக Air Crack ஆகி விரிசல் ஏற்படும்.
அவ்வாறு இன்று ஏற்பட்டதை கண்டு தான் அலுவலர்கள் அனைவரும் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டதாக நினைத்து அச்சத்துடன் வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில் பழைய டைல்ஸ்களை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக பெரிய டைல்ஸ்களை அடுத்த 2 நாட்களில் பதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்”என்று எ.வ.வேலு தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஓவியாவின் அடுத்த வீடியோ… பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்!
நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடத்தில் அதிர்வு?… அச்சத்தில் வெளியேறிய ஊழியர்கள்!
இர்பானுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
10 லட்சம் ரொக்கம் 50 பவுன் நகை பத்தல… வரதட்சணை கொடுமையால் உயிரை மாய்த்த பேராசிரியர்!