தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ளது நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடம்.
மொத்தம் 9 மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில் பல்வேறு அரசுத்துறை சார்ந்த சுமார் 6,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் அக்கட்டடத்தில் இன்று (அக்டோபர் 24) காலை திடீரென அதிர்ந்ததாக ஊழியர்கள் உணர்ந்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் அச்சத்துடன் கட்டடத்தை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசாரும், தீயணைப்பு படையினரும் நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடத்தில் ஆய்வு செய்தனர்.
அப்போது கட்டடத்தின் முதல் மாடியில் பதிக்கப்பட்டு வந்த டைல்ஸில் பயங்கர சத்தத்துடன் விரிசல் ஏற்பட்டுள்ளதை போலீசார் உறுதி செய்தனர்.
இதனால் கட்டடத்தில் இருந்து வெளியேறிய ஊழியர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்து, அவர்கள் அனைவரும் தங்களது பணிக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
இர்பானுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
10 லட்சம் ரொக்கம் 50 பவுன் நகை பத்தல… வரதட்சணை கொடுமையால் உயிரை மாய்த்த பேராசிரியர்!