பாதிரியாரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் அரியலூர் மாவட்ட செயலாளர் முத்துவேல் மீது இன்று (மார்ச் 18) குண்டர் சட்டம் பாய்ந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் அமைந்து இருக்கும் சேக்ரட் ஹார்ட் என்ற தனியார் பள்ளியில் அரியலூரை சேர்ந்த மாணவி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் திடீரென தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது கட்டாய மதமாற்றமே மாணவியின் தற்கொலைக்கு காரணம் என்று பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் குற்றம்சாட்டின.
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அரியலூர் மாவட்ட செயலாளர் முத்துவேல் என்பவரும் தஞ்சை பள்ளியில் படித்த மாணவி மதமாற்றம் செய்யக்கோரி வற்புறுத்தியதால் தான் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி வீடியோ வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
மேலும் இரு மதத்தினரிடையே மோதலை தூண்டும் வகையில் நோட்டீஸ் விநியோகித்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் முத்துவேல் கைதானார்.
இந்நிலையில் அரியலூர் தேவாலயத்தின் ஒன்றில் பாதிரியாராக இருந்து வரும் டோமினிக் சாவியோவை மிரட்டி முத்துவேல் சமீபத்தில் ரூ.25 லட்சம் பறிக்க முயன்றார்.
முத்துவேல் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டிய ஆடியோவை வெளியிட்ட டொமினிக், அதுகுறித்து அரியலூர் காவல்நிலையத்திலும் புகார் அளித்து இருக்கிறார்.
இதனையடுத்து முத்துவேல் மதக்கலவரத்தை தூண்டுதல், ஆபாசமாக பேசுதல், பணம் கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அரியலூர் மாவட்ட செயலாளர் முத்துவேல் மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
2,3 நாட்கள் வந்தால் தேர்வெழுத அனுமதியா?: அன்பில் மகேஷ் பதில்!
ராஜினாமா… அண்ணாமலையின் தனிப்பட்ட கருத்து: நயினார் நாகேந்திரன்