மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 6) மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை வெளியேறி வரும் நிலையில், பருவமழையை தீவிரப்படுத்தும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்தது.
இது மெல்ல வலுவிழந்து ஆந்திர கடலோர பகுதியை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நேற்று முதல் நிலவி வருகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 09 ஆம் தேதி வரை அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இன்றைய தினம் தமிழ்நாட்டில் வட தமிழக மாவட்டங்கள் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை முதல் சென்னையில் மழை!
அதேவேளையில் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அதன்படி இன்று அதிகாலை முதல் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வேளச்சேரி, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, கோடம்பாக்காம், சேப்பாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
துரைமுருகன் செய்தது என்ன? கேள்விகளை அடுக்கும் டாக்டர் சங்கம்!
எங்கே என் பி.எஃப் வட்டி? நள்ளிரவில் பதிலளித்த நிதியமைச்சகம்!