விடுமுறை நாட்கள் முடிந்து திங்கட்கிழமை அலுவலகம் செல்பவர்கள் காலை உணவாக இந்த ஜவ்வரிசி இனிப்புக் கஞ்சி செய்து சாப்பிடலாம்.
ஜவ்வரிசியில் புரதம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. அத்துடன், கலோரிகளின் அளவும் மிகக் குறைவு. இது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதோடு, எலும்புகளுக்கும் வலு சேர்க்கும். இந்தக் கஞ்சியை காலை உணவாக எடுத்துக்கொண்டால், நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பீர்கள்.
என்ன தேவை?
ஜவ்வரிசி – அரை கப்
சர்க்கரை – தேவையான அளவு
காய்ச்சி ஆறவைத்த பால் – ஒரு கப்
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
எப்படிச் செய்வது?
ஜவ்வரிசியை வாணலியில் போட்டு நன்கு பொரியும் வரை வறுத்து, பிறகு மிக்ஸியில் பொடிக்கவும். பொடித்த மாவுடன் சிறிதளவு கொதிக்கும் நீர் விட்டுக் கரைத்து… அத்துடன் பால், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… பனீர் சாப்பிடுவதால் உடல் எடை கூடுமா?
கிச்சன் கீர்த்தனா: மிக்ஸ்டு ஜிஞ்சர் ஜூஸ்
சூப்பர் டிப்ஸ்..