கிச்சன் கீர்த்தனா: சேமியா பிரியாணி

Published On:

| By Selvam

Vermicelli Biryani Recipe in Tamil

வீக் எண்ட் என்றால் விருப்பமான உணவுகளை வெளியிடங்களுக்கு சென்று சுவைப்பது அதிகரித்து வரும்நிலையில், இந்த வீக் எண்டுக்கு இந்த சேமியா பிரியாணி செய்து வீட்டிலுள்ளவர்களை வீட்டிலேயே அசத்தலாம்.

என்ன தேவை?

சேமியா – 2 கப்
தண்ணீர் – 4 கப்
கேரட் – ஒன்று
பச்சைப் பட்டாணி – அரை கப்
பிரெட் ஸ்லைஸ் – 2
எண்ணெய் – 2 டீஸ்பூன்
வெங்காயம் – ஒன்று
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
தக்காளி – ஒன்று
புதினா இலைகள் – 6
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
பட்டை – அரை அங்குலத் துண்டு
கிராம்பு – 3
ஏலக்காய் – 2
உப்பு – தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

ஒரு கடாயைச் சூடாக்கி, சேமியா சேர்த்து 2-3 நிமிடங்கள் நடுத்தர தீயில் வறுக்கவும். மற்றொரு கடாயில் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து வறுத்த சேமியாவைச் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் ஊற வைக்கவும். சேமியாவைத் தண்ணீரிலிருந்து வடிகட்டி வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். இப்போது இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, அது மென்மையாக மாறும் வரை வேகவிடவும். பிறகு புதினா இலைகளைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அதில் நறுக்கிய கேரட் மற்றும் பச்சைப் பட்டாணி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். தேவையான நீர், உப்பு, கரம் மசாலாத்தூள், பிரெட் ஸ்லைஸ் மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும். நன்கு கலந்து, காய்கறிகள் வேகும் வரை மூடி வேகவிடவும். சேமியாவைச் சேர்த்து மெதுவாகக் கலக்கி 2-3 நிமிடங்கள் வேகவிடவும். சேமியா பிரியாணி தயார். சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: உதயநிதியோடு மீண்டும் மோதிய ஆதவ்… திருமா கொடுத்த சிக்னல்? உச்ச கோபத்தில் திமுக

”விஜய் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை” : திருமாவளவன்

அது போன வருஷம்… இது இந்த வருஷம்… : அப்டேட் குமாரு

இறுமாப்பு 200… மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள் : திமுக மீது விஜய் தாக்கு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share