கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அடுத்து அடுத்து வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அய்யனார் பாளையம் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று இன்று (ஜனவரி 3) அதிகாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது போக்குவரத்து நெரிசல் இருக்கவே கார் ஓட்டுநர் காரை மெதுவாக நிறுத்தியிருக்கிறார்.
அப்போது பின்னால் வந்த டாரஸ் லாரி காரின் மீது மோதி இருக்கிறது.
இதில் அடுத்து அடுத்து தனியார் பேருந்து மற்றொரு லாரி, கார் என ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கார் நடுவில் சிக்கி அப்பளம் போல நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் ஒரே காரில் பயணம் செய்த இரண்டு பெண்கள், இரண்டு சிறுவர்கள் உள்பட ஐந்து பேர் சம்ப இடத்திலேயே பலியாகினர்.
சம்பவ இடத்திற்கு வந்த வேப்பூர் போலீசார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி வேப்பூர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் காருக்குள் சிக்கி இருந்த உடல்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காரின் நம்பரை வைத்து விசாரணை நடத்தியதில், சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
நங்கநல்லூர் இந்துகாலனியை சேர்ந்த விஜயராகவன்(42), அவர் மனைவி வட்சலா(37), விஜயராகவனின் தாயார் வசந்த லஷ்மி(70), மகன்கள் அதீர்த்(10), விஷ்ணு(5) ஆகியோர் கேரளாவுக்கு கோவிலுக்கு சென்று வீடு திரும்பும்போது வேப்பூர் ஐய்யம் பாளையத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கின்றனர்.
இந்த தகவல் அறிந்த நங்கநல்லூர் இந்துகாலனியில் உள்ள அவர்களின் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்னர்.
கலை.ரா
பொங்கல் தொகை எப்போது?- அமைச்சர் முக்கியத் தகவல்!
பணமதிப்பழிப்பு நடவடிக்கை: முன்னாள் நிதி ஆயோக் அதிகாரி அதிரடி கருத்து!