வேங்கைவயல் வழக்கு : மூவருக்கு ஜாமீன்!

Published On:

| By Kavi

Vengaivayal case Bail granted

வேங்கைவயல் வழக்கில் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்ற மூன்று பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. Vengaivayal case Bail granted

கடந்த 2022ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் முடுகாடு ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும், மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியில் மனித மலம் கலந்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக முரளி ராஜா, சுதர்சனன், முத்துகிருஷ்ணன் ஆகிய மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் முரளிராஜா 2013 பேட்ச் முதல் நிலை காவலராக புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார் என்ற அதிர்ச்சித் தகவலும் கிடைத்தது. மூன்று பேர் மீதும் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இதுதொடர்பாக நமது மின்னம்பலத்தில், வேங்கைவயல்… ஒரு வழியாய் அவிழ்ந்த முடிச்சு! அந்த மூவரில் ஒருவர் போலீஸ்: அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! என்ற தலைப்பில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தநிலையில் இந்த வழக்கு, மாவட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து, குற்றவியல் நடுவா் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து வழக்கின் விசாரணை மார்ச் 11ஆம் தேதி நடைபெறும் என்றும் அப்போது குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமனன்றம் உத்தரவிட்டது.

இதற்கான சம்மனை எடுத்துக் கொண்டு சிபிசிஐடி போலீஸாா் கடந்த 5 ஆம் தேதி வேங்கைவயல் சென்றனா்.

ஆனால் மூவரின் வீடுகளிலும் குற்றம்சாட்டப்பட்டவா்கள் இல்லாத நிலையில், அவா்களின் குடும்பத்தினரிடம் சம்மனை  வழங்கிவிட்டு வந்தனர். 

இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன், சுதா்சன் ஆகியோர் விசாரணைக்காக புதுக்கோட்டை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தனர்.

ஆனால் இன்று நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1 விடுமுறை என்பதால் புதுக்கோட்டை உரிமையியல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு பட்டியலிடப்பட்டது. அப்போது நீதிபதி பூர்ணிமா முன் மூவரும் ஆஜராகினர்.

அவர்கள் தங்களது வழக்கறிஞர்கள் மூலமாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து மூன்று பேருக்கும் தலா இரண்டு பேர் என மொத்தம் 6 பேர் தனிநபர் ஜாமீன் உத்தரவாதம் அளித்தனர்.

இதனால் மூன்று பேருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். Vengaivayal case Bail granted

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share