வேலூர் மாவட்டத்தில் இன்று (பிப்ரவரி 19) நடைபெறவுள்ள மயான கொள்ளை நிகழ்ச்சியை முன்னிட்டு 21 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மாசி அமாவாசை தினத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின் போது, அங்காளம்மன், கருப்பண்ணன், பெரியண்ணன், முனியப்பன் உள்ளிட்ட காவல் தெய்வங்களை சிறப்பிக்கும் வகையில் அவர்களைப் போல பக்தர்கள் காளி வேடமணிந்து சுடுகாடு நோக்கி சென்று நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
வேலூர் மாவட்டத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சிக்காக மக்கான் அம்பேத்கர் நகர், விருதம்பட்டு ஓல்டு டவுன், தோட்டப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் அங்காளம்மன் மற்றும் காளியம்மன் தேர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள பாலாற்றங்கரையில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் வேடமணிந்து வழிபடுவார்கள்.
மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக வேலூர் – காட்பாடி பாலத்தில் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை சுற்றியுள்ள 21 டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்!