வேலூர் டிஐஜி ஆனி விஜயாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
வேலூரில் ஐஎப்எஸ் நிதி நிறுவனம் 6000 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டு இருக்கிறது. இந்த விஷயத்தில் வேலூர் டிஐஜி ஆனி விஜயா முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது.
இந்நிலையில் அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு இடம்மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. காஞ்சிபுரம் சரக டிஜஜி சத்யப்பிரியா வேலூர் சரகத்தை கூடுதலாக கவனிப்பார் என்று தமிழ்நாடு அரசு கூறியிருக்கிறது.
தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆனி விஜயா, சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் டிஐஜியாக பதவி வகித்தவர்.
ஆனி விஜயா ஐபிஎஸ் திருச்சியில் ரயில்வே எஸ்.பி.யாக இருந்தபோதுதான் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் ஸ்வாதி படுகொலை சம்பவம் நடந்தது.
அப்போது ஸ்வாதி வழக்கு தொடர்பாக சென்னையில் விசாரணை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கலை.ரா
பி.டி.ஆர் கார் மீது செருப்பு வீச்சு : மதுரையில் பரபரப்பு!
They only Educate Politicians How to loot public fund without get caught.
இந்தியாவில் வெறும் சர்டிபிகேட் வைத்துக் கொண்டு பந்தா IAS,IPS அடிப்படை அறிவு இல்லாதவர்கள்
சுதந்திரத்திற்குப் பின் இந்திய நிர்வாகம் சீரழிவு
காரணம்
IAS,IPS