கனமழை காரணமாக வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (செப்டம்பர் 26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழை தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உட்பட பல மாவட்டங்களில் இரவு மழை பெய்தது. கடலூர் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம், ஆலப்பாக்கம், பண்ருட்டி, வடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறையில் கொள்ளிடம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், எடமணல், பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.
ஈரோடு, நாகப்பட்டினம், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை
இந்நிலையில் கனமழை காரணமாக வேலூரில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு (1 முதல் 5 ஆம் வகுப்பு வரை) மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
இராணிப்பேட்டை மாவட்டத்திலும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.
மோனிஷா
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!