கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்கள்: மெட்ரோ முக்கிய அறிவிப்பு!

தமிழகம்

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டு நீண்ட காலமாக எடுக்கப்படாமல் உள்ள வாகனங்களை உரிய ஆவணங்களைக் காட்டி எடுத்துக் கொள்ளலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் நீண்ட நாட்களாக மெட்ரோ பயணிகள் தங்களது வாகனங்களை எடுக்காமல் உள்ளார்கள்.

இதில் இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் மெட்ரோ பயணிகள் தங்களது வாகனங்களை உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து எடுத்துச் செல்ல ஒரு வாய்ப்பு அளிக்கிறது”

என்று தெரிவித்துள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவன கட்டுப்பாட்டில் 41 மெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்ளன.

இந்த நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று காலக்கட்டத்தில் இருந்து இதுநாள் வரை தோராயமாக 120 அனைத்து வகை வாகனங்களை எடுத்துச் செல்லாமல் அதன் உரிமையாளர்கள் பல்வேறு காரணத்தால் விட்டு சென்றுள்ளனர்.

அவர்களது வாகனங்களை எடுத்துச் செல்ல வாகனத்துக்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அதற்கான வாகன நிறுத்தக் கட்டணத்தை செலுத்தி,

வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை எடுத்துச் செல்லலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், “அவ்வாறு எடுத்துச் செல்லாத வாகனங்கள் அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும்.

எனவே வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களைப் பெற்றுச்செல்ல ஒரு வாய்ப்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி மெட்ரோ பயணிகள் தங்களது வாகனங்களை உரிய ஆவணங்களை சமர்ப்பித்து 28.10.2022ஆம் தேதிக்குள் எடுத்து செல்லலாம்” என்றும் தெரிவித்துள்ளது.

-ராஜ்

அர்ஷ்தீப் சிங்கின் அசத்தல்: 106 ரன்னில் சுருண்ட தெ.ஆப்பிரிக்கா!

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *