Vegetables Stuffed Chapathi Recipe

கிச்சன் கீர்த்தனா: காய்கறி சப்பாத்தி

தமிழகம்

பல வீடுகளில் இப்போது இரவு நேர உணவாகிவிட்டது சப்பாத்தி. ஆனால், தினமும் சப்பாத்தியா என்று அலுத்துக்கொள்பவர்களுக்கு  இந்தச் சுவையான காய்கறி சப்பாத்தி பெஸ்ட் சாய்ஸாக இருக்கும். இதில் நார்ச்சத்துக்கள், பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, புரதம் போன்றவை உள்ளன. சருமத்துக்கு நல்லது. வயிறு நிறைந்த உணர்வைத் தரும். அனைத்து காய்கறிகளும் சேர்த்து செய்வதால் இது சத்தானது மற்றும் ஆரோக்கியமானது.

என்ன தேவை?

கோதுமை மாவு – ஒரு கப்
கேரட், கோஸ், பீட்ரூட், குடமிளகாய் துருவியது – ஒரு கப்
மிளகாய்த் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – அரை டீஸ்பூன்
எலுமிச்சம்பழச்சாறு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – சப்பாத்தி சுடுவதற்குத் தேவையான அளவு

எப்படிச் செய்வது?

எண்ணெயைத் தவிர மீதிப் பொருட்கள் எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டுக் கலந்து, கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். மிக்ஸி இருப்பவர்கள், மிளகாய்த்தூளுக்குப் பதிலாக, இரண்டு பச்சை மிளகாய், அரை டீஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்து, மாவில் சேர்த்துப் பிசைந்து கொள்ளலாம். சுவை இன்னும் அதிகமாகும். பிசைந்த மாவை, சப்பாத்திகளாகத் திரட்டி, தோசை தவாவில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். தொட்டுக்கொள்ள எதுவும் தேவை இல்லை. அப்படியே சாப்பிடலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: முளைகட்டிய பயறு சப்ஜி

சண்டே ஸ்பெஷல்: நிறைய தண்ணீர் குடிப்பதும் ஆபத்தா?

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *