கிச்சன் கீர்த்தனா: வெஜிடபிள் சால்ட் லஸ்ஸி!

தமிழகம்

கோடை விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு நோய்களை உண்டாக்கும் ஃபிரிட்ஜ் நீருக்குப் பதிலாக,  சோர்வை விரட்டும் இந்த லஸ்ஸியைச் செய்து கொடுக்கலாம். வெயிலினால் வரும் வியர்வை காரணமாக தாது உப்புக்கள் வெளியேறுவதைச் சரி செய்யும் இந்த லஸ்ஸி, அனைவருக்கும் ஏற்றது; ஆரோக்கியமானது.

என்ன தேவை?

நறுக்கிய வெள்ளைப் பூசணிக்காய், சுரைக்காய்,  வாழைத்தண்டு – வெள்ளரிக்காய் – தலா ஒரு கப்
நறுக்கிய கேரட் – அரை கப்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
புதினா இலைகள் – சிறிதளவு
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு (தோல் சீவவும்)
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு
கெட்டித் தயிர் – ஒரு கப்
ஐஸ் துண்டுகள், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

காய்களை ஒன்றாக மிக்ஸியில் போட்டு, அரை கப் தண்ணீர் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதை வடிகட்டி எடுத்து வைக்கவும் (காய்களை வீணாக்காமல் கூட்டு, சூப் போன்றவற்றில் சேர்க்கலாம்). இஞ்சி, கறிவேப்பிலையை மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். வடிகட்டிய காய்கறி நீருடன் சீரகத்தூள், பெருங்காயத்தூள், அரைத்த இஞ்சிக் கலவை, தயிர், தேவையான உப்பு, ஐஸ் துண்டுகள் சேர்த்து, மிக்ஸியில் அடித்து, புதினா இலைகள் சேர்த்துப் பரிமாறவும்.

தேங்காய் டிலைட்

ஹெர்பல் காக்டெய்ல்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *