கிச்சன் கீர்த்தனா: வெஜிடபிள் ரசம்

Published On:

| By Minnambalam Desk

Vegetable Rasam Recipe in Tamil

செரிமானத்துக்கு மிகவும் உதவும் ரசத்தை, சத்தான ரசமாகவும் செய்யலாம். அதற்கான ரெசிப்பிதான் இது. வீட்டிலுள்ள அனைவருக்கும் ஏற்றது… ஆரோக்கியமானது.

என்ன தேவை? Vegetable Rasam Recipe in Tamil

கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் – தலா 25 கிராம்
மிளகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒன்றரை டீஸ்பூன்
பூண்டு – 5 பல்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு – தேவையான அளவு
தக்காளி – 2
எண்ணெய் – ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
புளி – 50 கிராம்

எப்படிச் செய்வது? Vegetable Rasam Recipe in Tamil

கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் ஆகியவற்றை நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் சீரகம், மிளகு, பூண்டு ஆகியவற்றை இடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அரை டீஸ்பூன் சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, இடித்து வைத்திருக்கும் மசாலாவையும் சேர்த்து வதக்கி… வேக வைத்த காய்கறியை சேர்க்கவும். இத்துடன் நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், புளிக் கரைசல் சேர்த்து, பின்னர் உப்பு போட்டு… கொத்தமல்லி தூவி, கொதிக்கும் முன் இறக்கிப் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share