கிச்சன் கீர்த்தனா: வெஜிடபிள் கோஸ்மல்லி!

தமிழகம்

வீட்டில் உள்ள பொருட்களை வைத்து என்ன செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த வெஜிடபிள் கோஸ்மல்லி ரெசிப்பி உதவும். உடனடி எனர்ஜியைத் தரும் இது… அனைத்து வயதினருக்கும் ஏற்றது; ஆரோக்கியமானது; 

என்ன தேவை?

பாசிப்பருப்பு – 100 கிராம்
துருவிய கோஸ், துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் – தலா ஒரு கப்
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
எலுமிச்சம் பழம் – ஒரு மூடி
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை நன்கு வடித்துவிடவும். துருவிய கேரட், கோஸ், நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிந்து, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: இதே முறையில் முளைகட்டிய பயறு வகைகளையும் தயாரித்துச் சாப்பிடலாம். விருப்பமான காய்கறிகளை சேர்த்து (வெங்காயம், தக்காளி, பச்சை சோளம்) பச்சையாக சாப்பிடுவதால், அனைத்துச் சத்துகளும் அப்படியே உடலுக்கு கிடைக்கும்.

கீரைக்கூட்டு

பிரியாணிக்குப் பிறகு சோடா குடிப்பவரா நீங்கள்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *