கிச்சன் கீர்த்தனா: வெஜ் ஜல்ஃப்ரைசி

Published On:

| By Selvam

Veg Jalfrezi Recipe in Tamil Kitchen Keerthana

குளிர்காலங்களில் காய்கறிகள் நிறைய கிடைப்பதால், சப்பாத்தி, ஃப்ரைடு ரைஸ் போன்றவற்றுக்கு, இந்த வெஜ் ஜல்ஃப்ரைசி சைடிஷ் செய்யலாம். இதன் சுவை பிரமாதமாக இருக்கும். அனைவருக்கும் ஏற்றது.

என்ன தேவை?

காலிஃப்ளவர் (சிறிய பூக்களாக உதிர்ந்தது) – 10 பூக்கள்
கேரட், உருளைக்கிழங்கு – தலா ஒன்று
பீன்ஸ் – 10
பச்சைப் பட்டாணி – கால் கப்
குடமிளகாய் – ஒன்று
தக்காளி, வெங்காயம் – தலா 2
பட்டை – சிறிய துண்டு
கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று
மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை, புதினா – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

காய்கறிகளை விரல் நீளத்துக்கு மெல்லியதாக நறுக்கவும். மிக்ஸியில் ஒரு தக்காளி, ஒரு வெங்காயத்தை (தோல் நீக்கி) சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மீதியிருக்கும் தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து… நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும். அரைத்த தக்காளி-வெங்காய விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தேவையான அளவு நீர் சேர்த்து வேகவிடவும். காய்கள் வெந்து வரும்போது மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள்  உப்பு சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லித்தழை புதினா தூவிப் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: மங்களூர் மொச்சை கிரேவி

கிச்சன் கீர்த்தனா: மட்டர் பனீர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel