சென்னை வீரபத்ர கோவிலில் பெட்ரோல் குண்டு வீச்சு!

Published On:

| By Selvam

veerapathiran temple petrol bomb attack

சென்னை பாரிமுனை கொத்தவால்சாவடி  பகுதியில் உள்ள வீரபத்ர கோவிலில் இன்று (நவம்பர் 10) பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. veerapathiran temple petrol bomb attack

சென்னை பாரிமுனை கொத்தவால்சாவடி கோவிந்தப்ப நாயக்கர் தெருவில் வீரபத்ர கோவில் அமைந்துள்ளது. கோவில் வாசலில் அதே பகுதியை சேர்ந்த முரளி கிருஷ்ணன் முந்திரி, உலர் பழங்கள் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இன்று காலை முரளி கிருஷ்ணன் மது போதையில் பெட்ரோல் குண்டுடன் கோவிலுக்கு வந்துள்ளார். மேலும் அவர் அங்கிருந்த பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் கோவில் அர்ச்சகர் மற்றும் பக்தர்கள் கோவிலில் இருந்து வெளியேறினர். அப்போது முரளி கிருஷ்ணன் தான் கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை கோவிலில் வீசியுள்ளார்.

கோவிலுக்கு வெளியே பெட்ரோல் குண்டு விழுந்து வெடித்துள்ளது. பெட்ரோல் குண்டு வெடித்ததில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொத்தல்சாவடி போலீசார் முரளி கிருஷ்ணனை கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், “நான்கு ஆண்டுகளாக வீரபத்ர கோவிலில் வழிபட்டு வருகிறேன். முந்திரி விற்பனை தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. கடவுள் எனக்கு எந்த நன்மையும் செய்யாததால் பெட்ரோல் குண்டு வீசினேன்” என்று மதுபோதையில் கூறியுள்ளார்.

முரளி கிருஷ்ணன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாரிமுனை வீரபத்ர கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெரு, ஶ்ரீ வீரபத்ர சுவாமி கோவில் கருவறைக்குள்ளே, சுவாமி சிலையின் மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்குப் போய்விட்டது. போலி மதச்சார்பின்மையும், அரைகுறை நாத்திகமும் பேசித் திரியும் பிரிவினைவாத அமைப்புக்களை கட்டுப்படுத்த, திமுக தவறியதன் விளைவு, இன்று கோவிலுக்குள்ளேயே பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது.

தீவிரவாதத் தாக்குதலை சிலிண்டர் வெடிப்பு என்று மடைமாற்ற முயற்சித்த திமுக அரசே இதற்கு முழு பொறுப்பு” என்று தெரிவித்துள்ளார். veerapathiran temple petrol bomb attack

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி : சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவு!

ஓபிஎஸ் மேல்முறையீட்டை விசாரிக்க மறுத்த உயர்நீதிமன்றம்!

BiggBossTamil7 Day 39: பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருக்க பயமா இருக்கு… புல்லி கேங்கை தெறிக்க விட்ட விசித்ரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment