Vck conclave cuddalore accident background

விசிக மாநாடு: வேன் விபத்து பின்னணி!

தமிழகம்

Vck conclave cuddalore accident background

திருச்சி சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் ஜனநாயகம் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழகம் முழுவதுமிருந்து வேன், பஸ் மற்றும் கார்களில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பயணித்தனர்.

இந்த மாநாட்டில் நேற்று இரவு கலந்துகொண்டு வீடு திரும்பியபோது, கடலூர் மாவட்டம் வேப்பூர் – விருத்தாசலம் சாலையில் எதிரே வந்த லாரி மீது வேன் நேருக்கு நேர் மோதியதில், மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மூன்று பேர் உயிருக்கு போராடிய நிலையில், முண்டியம்பாக்கம் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்துக்கான காரணம் ஓட்டுநரின் தூக்கமின்மையும், ஓவர் லோடும் என்கிறார்கள்.

Vck conclave cuddalore accident background

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் வில்லியனூர் பகுதியிலிருந்து திருச்சி விசிக மாநாட்டிற்கு சென்ற வேனில் 30 பேர் பயணித்துள்ளனர்.

ஒரு வேனில் 12+1 மொத்தம் 13  இருக்கைகள் இருக்கும். கூடுதலாக 5 முதல் 7 பேர் வரை நின்றுகொண்டு பயணிக்கலாம். ஆனால், இந்த வேனில் 30 பேர் பயணித்துள்ளனர்.

மாநாடு முடிந்து வீடு திரும்பும்போது, கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல்நிலையம் எல்லைக்குட்பட்ட என்.நாரையூரில் இன்று அதிகாலை சுமார் 2.45 மணியளவில்,

விருத்தாசலத்திலிருந்து தொழுதூர் நோக்கி வந்த லாரியும், திருச்சி தொழுதூர் வழியாக விருத்தாசலம் நோக்கி சென்ற விசிக மாநாட்டு வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

Vck conclave cuddalore accident background

இந்த விபத்தில் உத்திரக்குமார், யுவராஜ், அன்பு ஆகிய மூவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். ஓட்டுநர் சிரஞ்சீவி, சஞ்சய் உள்பட மூவர் படுகாயமடைந்து முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

25 பேர் திருச்சி, முண்டியம்பாக்கம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வட்டார போக்குவரத்துதுறை அதிகாரிகளும், காவல்துறையினரும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Vck conclave cuddalore accident background

இந்த விபத்து குறித்து நாம் அவர்களிடம் கேட்டபோது, “விபத்துக்குள்ளான வேனில் இரண்டு மடங்குக்கு அதிகமாக பயணிகளை ஏற்றியுள்ளனர்.

மேலும், ஓட்டுநர் சிரஞ்சீவி வாகனத்தை சிறிது நேரம் ஓரமாக நிறுத்தி ஓய்வெடுத்திருந்தால் பெரும் விபத்தை தவிர்த்திருக்கலாம்.

மேலும், ஓவர் லோடு என்பதால் பிரேக் அடித்தும் கண்ட்ரோல் பண்ண முடியாமல் நேருக்கு நேர் லாரியுடன் மோதியதே விபத்துக்கான காரணம்” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கோவை இளைஞரின் கேமராவில் சிக்கிய தங்கநிற புலி… எங்கேன்னு பாருங்க!

மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி: சந்தானம் படத்தை தயாரிக்கும் ஆர்யா

Vck conclave cuddalore accident background

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *