நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் விழுப்புரம் தொகுதியில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விசிக கட்சியின் ரவிக்குமார், அதிமுக சார்பில் பாக்யராஜ், பாஜக சார்பில் முரளி சங்கர், நாம் தமிழர் கட்சி சார்பாக களஞ்சியம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், இன்று (ஜூன் 4) நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், விழுப்புரம் தொகுதியில் 2 சுற்று வாக்கு எண்ணிக்கையில், திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
முதல் சுற்று முடிவில்,
விசிக – 22,951
அதிமுக – 20,930
பாமக – 8,666
நாதக – 2,929
இரண்டாம் சுற்று முடிவில்,
விசிக – 45,880
அதிமுக – 41,382
பாமக – 18,670
நாதக – 5,871
ஆறாவது சுற்று முடிவில்,
விசிக – 1,37,115
அதிமுக – 1,14,717
பாமக – 50,294
நாதக – 18,616
விழுப்புரம் தொகுதியை பொறுத்தவரை 6வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் 22,398 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாஜக முன்னிலை இண்டியா கூட்டணிக்கு பின்னடைவு!
வாரணாசி : பின்னடைவை சந்தித்த மோடி… காங்கிரஸ் கடும் போட்டி!