கிச்சன் கீர்த்தனா: வாழைத்தண்டு புளிப்பச்சடி

Published On:

| By christopher

எளிமையாகக் கிடைக்கும் வாழைத்தண்டின் பலன்கள் குறித்து சொல்லிக்கொண்டே போகலாம். பலவிதமான நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்ட வாழைத்தண்டுடன் புளி சேர்த்து வித்தியாசமான சுவையை அனுபவிக்க இந்த ரெசிப்பி உதவும்.

என்ன தேவை?

வாழைத்தண்டு – ஒரு பெரிய துண்டு
புளி – எலுமிச்சம் பழ அளவு
பொடித்த வெல்லம் – 50 கிராம்
பச்சை மிளகாய் – ஒன்று
தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்
மோர் – சிறிதளவு
கடுகு – கால் டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாழைத்தண்டை மேல் தோல் சீவி, வில்லை வடிவமாக நறுக்கி நாரை நீக்கிப் பொடியாக நறுக்கவும். தண்ணீரில் சிறிது மோர் ஊற்றி நறுக்கிய வாழைத்தண்டைப் போட்டு வைக்கவும். புளியைக் கரைத்து, நறுக்கிய வாழைத்தண்டை எடுத்து அதனுடன் சேர்த்து, உப்பு போட்டு வேக வைக்கவும். அதில் தேங்காய் துருவல், பச்சை மிளகாயை அரைத்து சேர்க்கவும். பிறகு, வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து, கடுகு தாளித்து இறக்கவும்.

வாழைப்பூ பொரியல்

கத்திரிக்காய் ரசவாங்கி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share