கிச்சன் கீர்த்தனா: வரகு – பச்சை மிளகாய் வற்றல்!

Published On:

| By Kavi

கோடைக்காலத்தில் கூட்டுக் குடும்பங்களில் வற்றல், வடாகம் பிழியும் தினங்கள் எல்லாம் திருவிழா பரபரப்பாக இருக்கும். ஆனால், இன்றைக்கு எல்லாமே மாறிவிட்டது. அம்மிக்கல்லும் ஆட்டு உரலுக்கும்தான் ஓய்வு என்றால்  வகைவகையான வற்றல் வகைகளையும் விற்பனைக்கு கொண்டு வந்து ஓய்வு கொடுத்துவிட்டது. இப்படிப்பட்ட நிலையிலும் வற்றல் பிழிய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த வரகு – பச்சை மிளகாய் வற்றல் பெஸ்ட் சாய்ஸாக இருக்கும்.

என்ன தேவை?

வரகு மாவு – 2 கப்
ஜவ்வரிசி – அரை கப்
பச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வரகு மாவு, ஜவ்வரிசி (ஒரு மணி நேரம் ஊற வைத்தது) பச்சை மிளகாய் விழுது, சீரகம், பெருங்காயம், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துக் கலந்து நீரில் கலக்கவும். அடுப்பில் வைத்து கிளறி, வெந்ததும் இறக்கி ஸ்பூனால் எடுத்து, பிளாஸ்டிக் ஷீட் அல்லது சுத்தமான வெள்ளைத் துணியில் ஊற்றிக் காய விடவும். தேவையான போது எடுத்துப் பொரிக்கவும்.

சாமை – கறிவேப்பிலை வற்றல்

தக்காளி வற்றல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment