கிச்சன் கீர்த்தனா : வரகு – அன்னாசிப்பழக் குழைச்சல்
அரிசி, கோதுமையைவிட அதிக நார்ச்சத்து கொண்டது வரகு. பொதுவாக சிறுதானியங்களில் கஞ்சி, கூழ், களி, தோசை, பொங்கல், அடை, பிரியாணி, கொழுக்கட்டை, இனிப்பு, கார பலகாரங்கள் போன்ற பல சுவையான, ஆரோக்கியம் பெருக்கும் உணவுகளைத் தயாரிக்கலாம்.
அதேபோல சிறுதானியங்களுடன் பழங்களையும் சேர்த்து சுவையான குழைச்சல் செய்யலாம். அதற்கு இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
வரகு அரிசி – ஒரு கப்
அன்னாசிப்பழம் – 4 ஸ்லைஸ் (அரைத்து 2 கப் சாறு எடுக்கவும்)
அன்னாசிப்பழத் துண்டுகள் – அரை கப்
வெல்லம் – அரை கப்
சுக்குத்தூள் – அரை டீஸ்பூன்
சர்க்கரை – 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
குக்கரில் வரகு அரிசியுடன் அன்னாசிப் பழச்சாறு, சர்க்கரை சேர்த்து மூடி இரண்டு விசில்விட்டு இறக்கவும். வெல்லத்துடன் தண்ணீர்விட்டு ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். அதை கடாயில் சேர்த்து அதனுடன் சுக்குத்தூள், வேகவைத்த சாதம், அன்னாசிப்பழத் துண்டுகள் சேர்த்துக் கிளறி, அடுப்பை ஐந்து நிமிடங்கள் சிறு தீயில் வைத்து, கொதிக்கவிட்டு இறக்கிப் பரிமாறவும்.
குறிப்பு: மெதுவடையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
கிச்சன் கீர்த்தனா – ஸ்பெஷல் நெய் அசோகா