மழைவிட்டாலும் சில்லென்ற சூழ்நிலையில் உடலுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் அவசியம். அதற்கு அரிசி, கோதுமையைக் காட்டிலும் நார்ச்சத்து அதிகம் உள்ள இந்த வரகு அரிசி அடை உதவும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இந்த அடை, அனைவருக்கும் ஏற்றது.
என்ன தேவை?
வரகு அரிசி – ஒரு கப்
துவரம்பருப்பு – கால் கப்
கடலைப்பருப்பு – கால் கப்
மைசூர் பருப்பு – கால் கப்
வெங்காயம் – ஒன்று
காய்ந்த மிளகாய் – 4
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – 10
கொத்தமல்லி – சிறிதளவு
தண்ணீர், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
வரகு அரிசியைக் கழுவி மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். அனைத்துப் பருப்புகளையும் கழுவி தனி பாத்திரத்தில் மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பிறகு, அரிசியை வடிகட்டி மிக்ஸியில் சேர்க்கவும். அதில் பெருங்காயத்தூள் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து மென்மையாக அரைத்தெடுக்கவும். இப்போது பருப்புகளை வடிகட்டி அதே மிக்ஸியில் சேர்க்கவும். கொர கொரப்பாக அரைத்து, அரிசிக் கலவையில் சேர்க்கவும். நன்றாகக் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
இதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒன்றாகக் கலக்கவும். ஒரு தோசை கடாயைச் சூடாக்கி, சிறிதளவு எண்ணெய் சேர்த்து, சிறிதளவு மாவைப் பரப்பி, நடுத்தர தீயில் அடையாகச் சுட்டெடுக்கவும். சுவையான, ஆரோக்கியமான வரகு அரிசி அடை தயார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”நிலச்சரிவில் 7 பேர் பலியானது துயரமான சம்பவம்” : நேரில் ஆய்வு செய்த உதயநிதி உருக்கம்!
கண்கலங்க செய்த திருவண்ணாமலை நிலச்சரிவு… குழந்தைகள் உட்பட 7 பேர் பலி… 4 பேரின் உடல்கள் மீட்பு!
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: ராமதாஸ்
அட, ‘கண்ணாத்தாள்’ படம் சூப்பரா இருக்கே..!
நாளை முதல் நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறுமா? : மத்திய அமைச்சர் பதில்!